Sunday, 1 February 2015

DAILY THANTHI JOBS

DAILY THANTHI JOBS


கிராமிய வங்கியில் அலுவலக உதவியாளர், அதிகாரி பணி

Posted: 31 Jan 2015 05:31 PM PST

ஆந்திர மாநிலம் வாரங்கலில் செயல்பட்டு வரும் ஆந்திரா கிராமிய விகாஸ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.
IBPS 2014 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியால் 2014-ல் நடத்தப்பட்ட RRB-CWE-III ZVdJ IBPS தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Officer-I, Office Assistant (Multipupose) பணிகளுக்கு மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: IBPS என்ற வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பொது எழுத்து தேர்வு RRB-CWE-2014-ல் பெற்ற மதிப்பெண் மற்றும்
நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கு முறை: www.apgvbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 04.02.2015
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.apgvbank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனத்தில் விமான பணியாளர் பணி

Posted: 31 Jan 2015 05:31 PM PST

ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனத்தில் விமான பணியாளர் பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப திருமணமாகாத ஆண்-பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Airline Attendant
காலியிடங்கள்: 221
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 முடித்து ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை AIR INDIA CHARTERS LIMITED என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் A/C Payee டி.டி.யாக செலுத்த வேண்டும். SC,ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் டி.டி.யை குழு விவாதத்தின்போது சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்தவு பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைதி தேதி: 07.02.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief of HR, Air India Charters Limited, Airline House, Durbar
Hall Road, Near Gandhi Square, Kochi - 682016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindiaexpress.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பாரத் பிராட்பேண்டு நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணி

Posted: 31 Jan 2015 04:35 AM PST

மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் பைபர் ஆப்டிக்ஸ் நெட்வொர்க் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பாரத் பிராட்பேண்டு (Bharat Broadband Network Limited). இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் டிரெய்னி இடங்களை கேட் 2015 தேர்வு அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 21 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு: கேட் 2015 தேர்வில் இ.சி., சி.எஸ்., ஐ.டி., இ.இ., தாள்களில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களை அறிய http://www.bbnl.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment